அங்குலானை பிரதேசத்தில், நேற்று மாலை புகையிரதத்தில் மோதி 08 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

அங்குலானை, சயுரபுர மாடி வீட்டுத் தொகுதிக்கு முன்னால் உள்ள புகையிரத வீதிக்கு குறுக்கால் சென்ற குறித்த சிறுவன் மருதானையிலிருந்து ஹிக்கடுவ நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதியே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த சிறுவன், புகையில் மோதியதில், பலத்த காயமடைந்த நிலையில்,  லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

 இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.