(ரி.விரூஷன்)

நுண்நிதி கடன் விடயம் தொடர்பாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னரும் எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை. ஆனால் தற்போது பிரச்சினை ஐ.நா. வரை சென்றடைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நுண் நிதி கடனால் பாரிய பிரச்சனை இருப்பதும் அதனால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் போன்ற பிரச்சனை இருப்பதாக ஐ.நா. நிபுனர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நுண் நிதி கடனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை அதிலிருந்து மீட்கும் வகையிலான சரியான திட்டமிடல்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.