எமக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது மனதின் பங்கு குறித்து யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதிலிருந்து உடல் நலத்தை மீட்பதில் மனம் முக்கிய பங்காற்றுகிறது என வைத்தியர் ராஜமோகன் தெரிவித்தார். 

 ஆங்கில வைத்தியம் ஏராளமான துறைகளில் தனித்தனி பிரிவுகளாக ஏற்படுத்தி வளர்ச்சியடைந்து கொண்டேச் செல்கிறது. உடல் நலத்தை மீட்பதில் மனதிற்கும் உரிய அளவிற்கு பங்கிருக்கிறது என்பதை முழுமையாக ஒப்புக்கொள்வதில்லை.

இந்நிலையில் மனிதர்களின் 90 சதவீத ஆரோக்கிய கேடு வாழ்க்கை நடைமுறையை பின்பற்றாததாலும், தொடர்பற்ற தொற்றுகளாலும் தான் உருவாகிறது.

அதாவது நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற நான் கொம்ப்யூனிகேபிள் டீஸிஸ் போன்றவற்றை தியானம், யோகா போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சிலர் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து உடலை எந்தவித ஆரோக்கியம் பாதிக்காதவாறு தற்காத்துக் கொள்கின்றனர்.

இத்தகைய பயிற்சிகளை பெண்கள் மேற்கொள்ளும் போது, அவர்களுக்கான மாதவிடாய் சுழற்சி ஒரு ஒழுங்கிற்குள் வருவதால் அவர்களால் எளிதாக அதனை எதிர்கொள்ள முடிகிறது. அதே போல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போதும், மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் தான் ஆரோக்கியம் மேம்படும்.