ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தினூடாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு இணங்கவே அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

மேலும் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கான காரணம் என்னவென்பது இதுவரை வெளிவரவில்லை.