இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தாலும டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

அத்துடன் இந்த தொடரை 4:1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி நான்காவது இடத்திலிருந்த நியூஸிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது.

அந்த வகையில் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 106 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இடத்திலும், அதே 106 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி மூன்றாம் இடத்திலும், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும், 102 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி ஐந்தாம் இடத்திலும் மற்றும் 97 புள்ளிகளுடன் இலங்கை அணி ஆறாவது இடத்திலும் உள்ளது.

அத்துடன் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் இந்திய அணியின் தலைவர் விராட் ஹோலி 930 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித் 929 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் 847 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இங்கிலாந்தின் ரூட் 835 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் 820 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இந்தியாவின் புஜாரா 772 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், இலங்கையின் தினுத் கருணாரத்ன 754 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், சந்திமல் 733 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.