நீர்வெட்டால் திருமலை மக்கள் அவதி

Published By: Vishnu

13 Sep, 2018 | 09:45 AM
image

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட அவசர திருத்த வேலை காரணமாக கடந்த 7ஆம், 8 ஆம் திகதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவித்து இன்று வரை சீரான நீர் விநியோகம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பாக தெரிவித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை,

திருகோணமலை நகரத்திற்கு செல்லும் நீரின் அளவை அதிகரிப்பதற்கான திருத்த வேலையை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர் விநியோகத்தை ஆரம்பித்தபோதும் நீர் அழுத்தம் குறைவாக காணப்படுகிறது.

இதனால் பெரும்பாலான இடங்களுக்கு நீர் கிடைக்கவில்லை.  

மேலும்  மீண்டுமொரு இடத்திலுள்ள நீர் குழாயில் எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏற்பட்டமையினால் நீர்விநியோகம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இன்று இப்பணிகளை நிறைவு செய்ய முயற்சித்து வருகின்றோம்.

மேலும் குடிநீர் மிக அவசரமாக தேவைப்படும் மற்றும் உயரமான பகுதிகளுக்கு, தாம் பவுசர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தது.

எவ்வாறானபோதும் 2 நாள் என அறிவித்து ஒருவாரம் வரை நீர்விநியோகம் சீராக வழங்காமையால் பொதுமக்கள் மிகவும் அவதியுறுகின்றனர். இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46