சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்த சம்பவம் அநுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று ஏற்கனவே திருமணமான 27 வயதான இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இராணுவ வீரர் ஒருவர் மேற்கொண்ட தவறான தொலைபேசி அழைப்பின் மூலம் அநுராதபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பெற்றோருக்குத் தெரியாமல், சிறுமி வீட்டில் இருந்து இராணுவ வீரர் உட்பட 3 பேருடன் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சிறுமி இராணுவ வீரரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

அதற்கு அடுத்த நாள் சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். எனினும் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் இருந்து மொனராகலைக்கு சென்ற இராணுவ வீரர் குறித்த சிறுமியை அழைத்துச் செல்லும் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.