ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்ட முந்திரிப் பருப்புக்களை நாய் கூட உண்ணமுடியாதவை என நேற்று முன் தினம் ஹம்பாந்தோட்டையில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் கொள்வனவு செய்த முந்திரிப் பருப்புக்களை நீக்கி விட்டதோடு முந்திரிப் பருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்துடனான செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு,

நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகளை எனக்கு தந்தார்கள்' : ஜனாதிபதியின் ஆதங்கம்