பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.டார்ரா ஆடம் கேல் பகுதி அருகேயுள்ள அக்குர்வால் கிராமத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததால் உள்ளே பணியாற்றி கொண்டிருந்த 9 தொழிலாளர்கள் இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்தனர்.பாகிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் சிலர் நிலக்கரியை வெட்டி எடுக்கின்றனர். முறையாக அனுமதி பெற்று இயங்கிவரும் சுரங்கங்களும் போதுமான பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் அங்கு அடிக்கடி விபத்துகள் இடம்பெற்று வருகின்றன.