இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைந்துள்ள போதிலும் இந்திய அணி வீரர்களிடமிருந்து வெளிப்பட்ட மனோநிலை எனக்கு மகிழ்;ச்சியை அளித்துள்ளது என அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது வெளிப்படுத்துகின்ற மனோநிலையே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது டெஸ்டின் பின்னர் ஐந்தாவது டெஸ்டை இலகுவாக விட்டுக்கொடுக்க மாட்டோம் என நாங்கள் தெரிவித்தோம் ஐந்தாவது டெஸ்டில் அதன் படி விளையாடினோம் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.

பல அணிகள் செய்யமுடியாது என கடந்தகாலங்களில் கைவிட்டுள்ள ஆனால் நாங்கள் அவ்வாறான மனோநிலையை வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தொடர்கள்  ஒவ்வொரு தனிநபரும் எப்படிப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன,நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்தால் பல தவறுகள் மூடிமறைக்கப்படலாம், அதன் காரணமாக உங்களிற்கு தெரியாமல் போகலாம் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.

நாங்கள் இங்கிலாந்திற்கு அழுத்தங்களை கொடுத்தோம் ஆனால் அந்த அழுத்தத்தினை தொடர்ந்து பேணுவதற்கு எங்களால் முடியவில்லை அதன் காரணமாகவே அவர்கள் எங்களை விடவும் நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் எனவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி பாரியளவிற்கு தன்னை திருத்திக்கொள்ளவேண்டிய தேவையில்லை,அதேபோன்று இந்த தொடரை வைத்து எங்களால் வெளிநாடுகளில் விளையாட முடியாது என கருதப்போவதுமில்லை என்றும் விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துடனான தொடரின் முடிவு குறித்து நாங்கள் நிச்சயமாக சந்தோசப்படபோவதில்லை அதேவேளை நாங்கள் விளையாடிய விதம் குறித்து எவரும் சந்தேகப்படமுடியாது எனவும் விராட்கோலி தெரிவித்துள்ளார்.