கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய குற்றவியல் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிடம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் சுமார் 3 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் குற்றவியல் திணைக்கள விசாரணையில் முன்னிலையான கோத்தாபய ராஜபக்ஷ, சற்று முன்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.