முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக பெருமளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில்ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அதிக உப்புச்செறிவு காரணமாக பெருமளவான மீன்கள் உயிரிழந்து கரையோதுங்கியுள்ளன.

இதனால் கரையோரப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், மீனவர்களின் தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.