ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்­கேற்கும் இலங்கை அணி நேற்று ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி வெற்றி வேட்­கை­யுடன் புறப்­பட்­டது.

எதிர்­வரும் 15 ஆம் திகதி ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் டுபாய் மற்றும் அபு­தா­பியில் நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் பங்­கேற்­க­வுள்ள இத் தொட­ருக்­கான இலங்கை அணி அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­ல் ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு புறப்­பட்டுச் சென்­றது.

ஒருநாள் தொட­ராக நடை­பெ­ற­வுள்ள ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளை­யாடும் இலங்கை அணியில் நீண்ட நாட்­க­ளுக்குப் பிறகு அனு­பவம் நிறைந்த நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க இணைக்­கப்­பட்­டுள்­ளமை அணிக்கு மிகப்­பெ­ரிய பலமே.

அத்­தோடு தடைக்­குள்­ளா­கி­யி­ருந்த அதி­ரடி ஆட்­டக்­கா­ர­ரான தனுஷ்க குண­தி­லக்கவும் அணிக்குத் திரும்­பி­யுள்ளார். இதே­வேளை டெஸ்ட் போட்­டி­களில் சகல துறைக­ளிலும் பிர­கா­சித்து வரும் தில்­ருவன் பெரே­ராவும் அணியில் இடம்­பெற்­றுள்ளார்.

இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்த லசித் மலிங்க, நான் கிரா­மத்திலிருந்து வந்­தவன். அதனால் கடு­மை­யான சூழல்­க­ளையும் என்னால் தாங்­கிக்­கொள்ள முடியும். நீண்ட இடை­வே­ளைக்குப் பிறகு அணியில் இடம்­ கி­டைத்­துள்­ளது. அதனால் என்­னு­டைய முழுத் திற­மை­யையும் வெவளிப்­ப­டுத்தி அணியின் வெற்­றிக்­காக உழைப்பேன் என்றார்.