தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சிறைக் கைதிகளை நாள் முழுவதும் பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிஷான் தன்சிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள 30 சிறைச்சாலைகளில் 20 ஆயிரம் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 11 ஆயிரம் பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவார்.

இன்றைய தினம் சிறைக் கைதிகளுக்கு மேலதிக உணவுப் பொருட்களும் வழங்க சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.