பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் மனைவி குல்சும் நவாஷ் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்த நீதிமன்ற அனுமதியுடன் அவரது கணவர் நவாஷ் ஷெரீப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் தற்போது அவென்பீல்ட் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவருடன் அவரது மகள் மரியம் நவாஷ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மனைவி குல்சும் நவாஷ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார் நவாஷ் ஷெரீப்
அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் வைகக்கப்பட்டுள்ள நவாஷ் ஷெரீப் மற்றும் மரியம் நவாஷ் மற்றும் சப்தார் ஆகியோர் லாகூரை சென்றடைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM