லிபிய கடல் பகுதியில் படனொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 100 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு இரு இரப்பர் படகுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்துள்ளன.

குறித்த இரு படகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 100 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன் போது  276 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.