பொதி செய்யப்பட்ட அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்க தென்னை பயிர்செய்கை சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்னை பயிர்செய்கை சபையின் தலைவர்,

சந்தையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கத்துடனேயே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நுவர்வோர் விவகார அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளோம்.

அத்துடன் சட்டம் தொடர்பில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களையும் தெளிவுபடுத்தி அடுத்த மாதத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.