பெண்கள் உரிமைகள்,வீடு வன்முறை,கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகள் பல முன்னிலைப்படுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச மகளிர் தினம் அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தென் அமெரிக்கா முழுவதும் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

சர்வதேச மகளிர் தினம் உலகளாவில் கொண்டாடப்படும் தினம் என்பதால் பிரேசில், சிலி, அர்ஜென்டீனா, கோஸ்டா ரிகா, வெனிசுலா பிரதேசங்களில் தமது உரிமைகளைகோரி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டன.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பல பெண்கள் தங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதியில்  எழுதப்பட்ட சுலோகங்கள் பயன்படுத்தி  கலந்துக்கொண்டனர்.