குருணாகல் பகுதியல் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் சிறிய ரக வாகனம்  ஒன்றின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போதே குறித்த நபர் காயமடைந்ததாகவும்  சம்பவத்தின் போது ஹெரோயினுடன் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த  நபரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.