இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த நிதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இங்­கி­லாந்­துக்கு எதி­ராக எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள கிரிக்கெட் தொட­ரின் ஒளி­ப­ரப்பு உரி­மைக்­கான நிதியை தனிப்­பட்ட ஒரு­வரின் கணக்­குக்கு மாற்­று­வ­தற்கு முய­ற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அறிவித்தது

இத­னை­ய­டுத்து இந் நிதி மோசடி முயற்சி தொடர்­பாக இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நிதிக்­குற்­றப்­ பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு முறைப்­பாடு செய்தமைக்காகவே பொலிஸ் மா அதிபர் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த ஒளிப­ரப்பு நிறு­வ­னத்­தினால் வழங்­கப்­ப­ட­வி­ருந்த 5.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களையே இப்­படி தனிப்­பட்ட கணக்­குக்கு மாற்ற முயற்­சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.