பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை

Published By: R. Kalaichelvan

11 Sep, 2018 | 06:54 PM
image

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பஸ் கட்டணங்களை 10 வீதத்தால் அதிரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள சங்கத்தின் தலைவரான ஸ்டேன்லி பெர்னாண்டோ,கடந்த மே மாதம் முதல் பஸ் கட்டணம் 12.5 சதவீதம் அதிகரிப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மீண்டும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும்.

மூன்று நாட்களுக்குள் அரசாங்கம் இதுதொடர்பில் தமது நிலைபாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 149 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 161 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது..

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 123 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 130 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் குழு நேற்று பிற்பகல் கூடிய போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39