பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். 

இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். 

இவரது மனைவி குல்சூம் நவாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் 68 வயதில் உயிரிழந்துள்ளார்.

இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷெரீப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தனர்.

தற்போது இவரது மறைவால், ரவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் பரோல் மூலம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.