(எம்.எம்.மின்ஹாஜ்)

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் தட்டுத்தாடுமாறிய முன்னைய ஆட்சியினர் தற்போது அதிகாரத்தை கைப்பற்ற முனைகின்றனர். ஆட்சியை கைப்பற்றினால் நாட்டை கட்டியெழுப்புவற்கு கூட்டு எதிரணியிடம் புதிய திட்டங்கள் ஏதும் உள்ளனவா?  என பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.

இந்த வருடத்தில் கடன் மற்றும் தவனையாக 3 திரிலியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்

இலங்கை மெர்சன்ட் வங்கியின் நவீனமயமாக்கப்பட்ட மஹரகம கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.