பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வேன்களின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து வேன் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

 எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ த சில்வா தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் பாடசாலை போக்குவரத்து வேன்களின் கட்டணத்தை 5 வீதத்தால் அதிகரிக்குமாறு சங்க உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால் பேருந்து கட்டணங்களிலும் திருத்தங்களை எடுத்துவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பயணிகள் பேரூந்து சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.