பொலன்னறுவை, ரம்பேவே பகுதியில் அமைந்துள்ள அங்கமெடில்ல தேசிய பூங்காவில், வன விலங்குகளை வேட்டையாடிய நபர் ஒருவரை  வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை வனவிலங்கு அதிகாரிகள் இன்று காலை அங்கமெடில்ல தேசிய பூங்காவில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, இரண்டு மான் குட்டிகளும், முள்ளம்பன்றியும் இறந்த பல விலங்குகளின் உடல்களும் மற்றும் 12 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜபர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.