பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 15 வயது இளைஞன் ஒருவனைக் கைதுசெய்துள்ளதாக கொபெய்கனே பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே இவ்வாறு குறித்த நபர் பக்குணாவல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

நேற்று வீட்டில் ஒருவரும் இல்லாத சமயம் வீட்டின் அறை ஒன்றில் சந்தேக நபர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திக் கொண்டிருந்ததை அவதானித்த சிறுமியின் சிறிய தாய், அது தொடர்பில் சிறுமியின் தந்தைக்கு அறிவித்த நிலையில், தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதோடு தந்தை வேலைக்குச் சென்றிருந்த போது பாதிக்கப்பட்ட சிறுமி மாத்திரமே வீட்டில் இருந்துள்ளதாகவும், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த அயல் வீட்டுக்காரர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  

பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ள  பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.