இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஆசிய கிண்ணப்போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக மலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருபதிற்கு இருபது போட்டிகளை அடிப்படையாக வைத்து ஒருவரை 50 ஓவர் போட்டிக்கு தெரிவு செய்யலாமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையிலேயே ஹத்துருசிங்க மலிங்கவி;ற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மலிங்க 50 ஓவர் போட்டிகளில் விளையாடியதை நாங்கள் பார்க்கவில்லை,ஆனால் அவரது உடற்தகுதி குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம் உள்ளுர் ரி20 போட்டிகளில் அவர் விளையாடி விதம் எங்களுக்கு மகிழ்;ச்சியை அளித்துள்ளது என ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும்,மேலும் அவரது அனுபவமும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் கடந்த ஜனவரியில் பார்த்தவேளை காணப்பட்டதை விட அவர் உடற்தகுதியுடன் காணப்படுகின்றார் கடந்த ஜனவரியில் பந்து வீசியதை விட அவர் சிறப்பாக பந்து வீசுகின்றார் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணத்தொடரின் ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் அணிகளுடனான போட்டிகளில் அவர்  மிகுந்த பிரயோசனமானவராக விளங்குவார் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

அவரை இதுவரை எதிர்கொள்ளாத வீரர்கள் யாராவது இருந்தால் அவர்களால் மலிங்கவை விளையாட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

முதல் இரு போட்டிகளிற்கும் நான் லசித்மலிங்கவையே நம்பியுள்ளேன் அந்த இரு போட்டிகளும் நாங்கள் அடுத்த சுற்றிற்கு செல்வதற்கு முக்கியமானவை மலிங்க ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

தனிநபரை விட கிரிக்கெட் முக்கியம்,அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவதே எனது கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.