இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன. 

தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அம்பியூலன்ஸ் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தயதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 30 பேர் வரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது