தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைப்பதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் -தமிழிசை

Published By: Daya

11 Sep, 2018 | 02:19 PM
image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை  நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ .க. தலைவரான தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும் விநாயகர் சிலையை நிறுவி விநாயகர் சதுர்த்தியை சமூக விழாவாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இது ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதி மக்களின் விழாவாக மாறி அப்பகுதி மக்கள் நடைபெறும் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், சேவை நிகழ்ச்சிகள், பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என மக்கள் விழாவாகவே மாறி வருகிறது.

ஆனால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர் உடனே தலையிட்டு தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கிட வேண்டும்,’ என்று அந்த அறிக்கையில் தமிழிசை தெரிவித்திருக்கிறார். ’

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் கொலை முயற்சி - 12...

2024-09-17 10:40:52
news-image

நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர்...

2024-09-17 11:03:16
news-image

புதுடெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா:...

2024-09-17 10:12:24
news-image

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்:...

2024-09-16 14:56:05
news-image

சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி ;...

2024-09-16 13:48:23
news-image

டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன்...

2024-09-16 11:47:32
news-image

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து...

2024-09-16 09:30:51
news-image

டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர்...

2024-09-16 07:11:47
news-image

நைஜீரியாவில் படகு விபத்து - 64...

2024-09-15 12:49:20
news-image

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகரின் பெயரில்...

2024-09-14 13:32:32
news-image

முதன் முதலில் ஆபிரிக்காவில் குரங்கம்மை தடுப்பூசியை...

2024-09-14 12:19:04
news-image

அரசு பேருந்து - லொறி மோதி...

2024-09-13 21:41:37