வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயத்துறையில் அதிகளவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.  இதனால்தான் அரசு எனக்கு இப் பதவியை தந்துள்ளனர் என பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற  மாவட்ட விவசாயக் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கூட்டத்தின் போது, யாழ் மாவட்டத்தில் ஒரு நெல் மூடை 72 கிலோ நிறையுடையதாக காணப்பட்டிருந்ததை விவசாயிகள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வெளி மாவட்டங்களில் ஒருநெல் மூடை 66 நிறையுடையாதாக நிர்ணயிக்கப்ப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை 66 கிலோ ஒருமூடையாக யாழ் மாவட்டத்திலும் நிர்ணயிக்க உடனடியாக விவசாய பிரதி அமைச்சரினால் 6 கிலோ நிறை குறைக்கப்பட தீர்மானம்.

ஒரு காலத்தில் விவசாய உற்பத்தியில் முன்னிலை வகித்த வடக்கு மாகாணம் இன்று ஆக கடைசி நிலையில் உள்ளது. 

வடக்கின் விவசாய உற்பத்திகள் அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளன.  ஆனால் வடக்கில் 40 வீதமானவர்கள் விவசாயிகளாக காணப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கின் விவசாயத் துறையினை மேம்படுத்த அரசிடம் விசேட மீள் எழுச்சி நிதியினை கோரியிருக்கிறேன். அரசும் அதனை ஒதுக்கீடு செய்வதற்கு இணங்கியுள்ளது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரதி விவசாய அமைச்சர் பதவியின் ஊடாக எமது மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை  ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.