(இராஜதுரை ஹஷான்)

இந்நிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பில் இந்நிய மத்திய அரசு மற்றும் நீதி துறையே தீர்மானிக்க வேண்டும். இதுவொரு சட்ட விடயம் ஆகவே  இவ்விடயத்தில் எவ்வித தனிப்பட்ட கருத்துக்களையும்  குறிப்பிட முடியாது என  முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நிய ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த உறுப்பினரான   சுப்ரமணியன் சுவாமி  தலைமையிலான  விராட் இந்துஸ்தான் நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ  விஜயத்தை மேற்கொண்டு இந்நியா சென்றுள்ளார். 

இந்நிலையில்  நேற்று  இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில் இந்நிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.