ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை கூடைப்பந்தாட்ட மகளிர் அணிக்கு இன்று காலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இது­வ­ரையில்  நடை­பெற்­ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டித் தொடர்­களில் இலங்கை 5 ­முறை சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்­ளது.

இந்நிலையில் இலங்கை அணி இன்று காலை வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பியது. இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை வந்தடைந்த இலங்கை அணியின் தலைவி கருத்துத் தெரிவிக்கையில், 

நாம் வெற்றி பெறுவதற்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியமை குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். எமது அடுத்த இலக்கு உலகக்கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டி. 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரில் முதல் 10 அணிகளுக்குள் நுழைவதே எமது ஆரம்ப இலக்கு.

எமக்கு நாட்டில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறந்த கூடைப்பந்தாட்ட திடல் இல்லை. கடற்படையினர் தான் எமக்கு தமது கூடைப்பந்தாட்ட திடலை தந்து உதவினர். இறுதிக்காலத்தில் தான் எமக்கு சுகததாஸ விளையாட்டரங்கின் கூடைப்பந்தாட்ட திடல் வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

1985 ஆம் ஆண்டு முதன்­மு­றை­யாக நடத்­தப்­பட்ட ஆசிய சம்­பி­யன்ஷிப் தொடரை மலே­ஷியா வென்­றது. அதன்­பி­றகு நடை­பெற்ற இரண்­டா­வது தொடரை இலங்கை அணி வென்­றது. அதன்­பி­றகு 1997 ஆம் ஆண்டு, 2001 ஆம் ஆண்டு, 2009 ஆம் ஆண்டு என 4 முறை சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்­ளது. 

கடந்த முதலாம் திகதி முதல் நடை­பெற்ற ஆசியக் கிண்ண ­போட்­டியில் நடப்பு சம்­பி­ய­னான மலே­ஷியா, உப சம்­பி­யனான இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், மாலைத்­தீவு, சீனா, ஜப்பான், ஹொங்கொங், சைனீஸ் தாய்ப்பே, பிலிப்பைன்ஸ், தாய்­லாந்து ஆகி­ய­வற்­றுடன் போட்டி ஏற்­பாடு நாடான சிங்­கப்பூர் ஆகிய 12 நாடுகள் பங்­கேற்­றன.

தலா­மூன்று அணிகள் ஏ,பீ,சி,டி என நான்கு குழுக்­க­ளாக நடை­பெற்ற லீக் சுற்றில் தத்­த­மது குழுக்­களில் முத­லிடம் பெறும் 4 அணிகள் சம்­பி­யன்ஷிப் கிண்­ணத்­துக்­கான பிரி­விக்கு முன்னேறியது.

இதன்­படி குழு ஏயில் மலே­ஷி­யாவும், குழு பீ யில்  இலங்­கையும், குழு சியில் சிங்­கப்­பூரும், குழு டியில் ஹொங்­கொங்கும் தத்­த­மது குழுக்­களில் முத­லிடம் பிடித்து சம்­பி­யன்­ஷிப்­புக்­கான பிரிவில் இடம்­பெற்­றன.  

தனது முதல் சுற்றில் விளை­யா­டிய இலங்கை இந்­தி­யாவை 101 – 29 என்ற கோல்கள் கணக்­கிலும், சைனீஸ் தாய்ப்­பேயை 137 – 5 என்ற கோல்கள் கணக்­கிலும் அபார வெற்­றியை ஈட்­டி­யது.

இதே­வேளை, தத்­த­மது குழுக்­களில் இரண்டாம் இடம் பெறும் அணிகள் 5 முதல் 8 வரை­யான இடங்­க­ளுக்­கான போட்டிப் பிரி­விலும், மூன்றாம் இடம் பெறும் அணிகள் 9 முதல் 12 வரை­யான இடங்­க­ளுக்­கான பிரி­விலும் போட்­டி­யிட்­டன.

சம்­பி­யன்­ஷிப்பின் பிர­தான போட்­டியில் பங்­கேற்ற இலங்கை அணி ஹொங்கொங்கை 71 – 48 என்ற கோல்கள் கணக்­கிலும், சிங்­கப்­பூரை 74 – 61 என்ற கோல்கள் கணக்­கிலும், நடப்புச் சம்­பி­யனான மலே­ஷி­யாவை 62 – 59 என்ற கோல்கள் கணக்­கிலும் வெற்றி பெற்று இரண்­டா­வது சுற்­றிலும் முத­லி­டத்தைப் பெற்று அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றது. 

ஹொங்கொங் அணி­யு­ட­னான அரை­யி­றுதிப் போட்­டியில் பெரும் சவாலை அளித்த ஹொங்கொங் அணியை 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தோல்­வி­ய­டை­யாத அணி­யாக இலங்கை இறுதிப் போட்­டிக்கு நுழைந்­தது. 

இதன் முதல் கால்­ ம­ணியில் 14 – 13 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை பின்­னிலை­யி­லிருந்­த­போதும், அடுத்த மூன்று கால் மணி­க­ளிலும் முறையே 15 – 10, 12 – 10, 15 – 12 என கோல்­களை போட்டு மொத்­த­மாக 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டின.

இரண்டாவது அரையிறுதியில் மலேஷியாவுடனான போட்டியில் -51 – 43 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சிங்கப்பூர்  இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இறுதிப் போட்டி சிங்­கப்­பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் இடம்பெற்றது.

இதில் இலங்கை அணி 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.