இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்டக்காரரான அலெஸ்டர் குக் நேற்று இடம்பெற்ற அவரது இறுதி இன்னிங்ஸில் சதம் அடித்ததன் மூலமாக டெஸ்ட் வரலாற்றில் அறிமுக மற்றும் இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்று வரும் இந்தியாவுடான டெஸ்ட் பேட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள அலெஸ்டர் குக், கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் கால் பதித்தார்.

இந்த போட்டியின் போது குக் தான் எதிர்கொண்ட முதலாவது இன்னிங்ஸில் 60 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டு, அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசினார்.

இந் நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இந்தியாவுடனான ஐந்தாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் குக் சதம் ஒன்றை விளாசியதன் காரணமாக அறிமுக மற்றும் இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

161 டெஸட் போட்டிகளில் குக் 33 ஆவது சதத்தினை நேற்றைய தினம்  பூர்த்தி செய்து, டெஸ்ட் பேட்டிகளில் 32 சதங்களை அடித்த அவுஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீவோக்கை  பின்னுக்குத் தள்ளி 10 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அத்­தோடு டெஸ்ட் போட்­டி­களில் அதிக ஓட்­டங்கள் எடுத்த வீரர்கள் பட்­டி­யலில் 12,400 ஓட்­டங்­க­ளுடன் 5 ஆவது இடத்தில் இருந்த சங்­கக்­கா­ரவை முந்­திய, குக் 12,472 என்ற சிறப்­பா­ன­தொரு பதிவை விட்­டுச்­செல்­கின்றமையும் குறிப்பிடத்தக்கது.