ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐ.நா. அமைதி பேச்­சு­வார்த்தை பல­ன­ளிக்­காத நிலையில் ஏமன் நாட்டில் பாது­காப்புப் படை­யி­ன­ருக்கும் போரா­ளி­க­ளுக்கும் இடை­யி­லான மோதலில் 84 பேர் உயி­ரி­ழந்­தனர். 

ஏமன் நாட்டில் ஜனா­தி­பதி அப்ட்-­ ரப்பு மன்சூர் ஹாதி தலை­மை­யி­லான சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற அரசை கடந்த 2015 ஆம் ஆண்டு நிலை­கு­லையச் செய்த ஹவுத்தி போரா­ளிகள் தலை­நகர் சனா நக­ரத்தை தங்­க­ளது கட்­டுப்­பாட்டில் வைத்­துள்­ளனர். 

மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சுக்கு எதி­ராக மற்­றொரு போட்டி அர­சாங்­கத்தை நடத்­தி­வரும் இவர்­கள்­ மீது உள்­நாட்டுப் படை­களும் அண்டை நாடான சவூதி அரே­பியா தலை­மை­யி­லான நேச­நாட்டுப் படைகளும் தொடர் தாக்­குதல் நடத்தி வரு­கின்­றன.

அந்­நாட்டின் இரண்­டா­வது பெரிய துறை­முகம் அமைந்­துள்ள ஹொடைடா மாகா­ணத்தில் ஹவுத்தி போரா­ளி­கள் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு ஈரான் அரசு மறை­மு­க­மாக ஆயுத உத­வி­களை அளித்து வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

ஹொடைடா மாகா­ணத்­துக்­குட்­பட்ட அனைத்து பகு­தி­க­ளையும் மீட்கும் நோக்­கத்தில் சவூதி அரே­பியா தலை­மை­யி­லான அமீ­ரகப் படைகள் சமீ­பத்தில் அங்கு முற்­று­கை­யிட்டு உச்­ச­கட்டத் தாக்­குதல் நடத்­தின. இத் தாக்­கு­தல்­களில் 10 ஆயிரம் பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 30 இலட்சம் பேர் தங்­க­ளது வசிப்­பி­டங்­களை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.

ஏமன் அர­சுக்கும் ஹவுத்தி போரா­ளி­க­ளுக்குமிடையே சம­ரசம் ஏற்­ப­டுத்த ஐக்­கிய நாடுகள் சபை முயன்­றது. இரு ­த­ரப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான அமைதி பேச்­சு­வார்த்­தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிர­தி­நி­தி­யாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்­பவர் நிய­மிக்­கப்­பட்டார்.

சுவிட்­ஸர்­லாந்து தலை­நகர் ஜெனி­வாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்­க­ளாக ஏமன் அரசு அதி­கா­ரி­க­ளுடன் ஆலோ­சனை நடத்தி வந்தார்.  இப் பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்க ஹவுத்தி போரா­ளிகள் சில நிபந்­த­னை­களை விதித்­தனர்.

அரசு தரப்­பினர் இதற்கு சம்­மதம் தெரி­விக்­கா­ததால் ஹவுத்தி போரா­ளிகள் இந்த அமைதிப் பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்­காமல் புறக்­க­ணித்­தனர். இதனைத் தொடர்ந்து ஐக்­கிய நாடுகள் சபையின் முயற்சி நேற்­று­ முன்­தினம் தோல்­வியில் முடிந்­தது.

இந்­நி­லையில், செங்­க­டலை ஒட்­டி­யுள்ள ஹோடைடா நகரில் சவூதி அரே­பியா தலை­மை­யி­லான கூட்டுப் படைகள் கடந்த 24 மணி­நே­ர­மாக நடத்­திய தாக்­கு­தல்­களில் 73 ஹவுத்தி போரா­ளிகள் கொல்­லப்­பட்­டனர். இரு ­த­ரப்பு மோதல்­களில் பாது­காப்புப் படையை சேர்ந்த 11 வீரர்­களும் உயி­ரி­ழந்­தனர். பல போரா­ளி­களும் 17 இரா­ணுவ வீரர்­களும் காய­ம­டைந்­தனர் என ஏமன் நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.