யாழ்ப்பாணத்திலிருந்து மிகிந்தலை  நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று  இரவு 9.30மணியளவில் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  யாழ் - மிகிந்தலை பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து  சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில்  பயணித்த மிகிந்தலையை சேர்ந்த சந்தேக  நபர் 2கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.