நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்  நல்லாட்சி அரசாங்கம்  தள்ளி விட்டுள்ளது - பந்துல

Published By: Priyatharshan

09 Mar, 2016 | 05:14 PM
image

( லியோ நிரோஷ தர்ஷன்)

நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்  நல்லாட்சி அரசாங்கம்  தள்ளி விட்டுள்ளதாக தெரிவித்துள்ள கூட்டு எதிர் கட்சி, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான  கையெழுத்து வேட்டையை பாராளுமன்றத்தில் ஆரம்பித்துள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தின்  முறையற்ற பொருளாதார கொள்கைகள் தொடர்பில் விவாதிப்பதற்கு ஒரு நாள் போதுமானதாக அமையாது. 

எனவே ஒரு வாரகால விவாதத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வரவேண்டும். எமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியா விடின் ஆட்சியை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டத்தை  பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட அறிக்கையிலும் அதன் பின்னரான விவாதத்திலும் சபாநாயகர் கூறிய வார்த்தைகளை தவிர ஏனைய அனைத்து மாற்றப்பட்டுள்ளது. 

எனவே நிதியமைச்சர் நம்பிக்கை இழந்து விட்டுள்ளார். வரி ஊடாக அரச வருமானத்தை அதிகரித்து மக்கள் மீது பாரத்தை சுமத்தும் கொள்கையை தற்போதைய ஆட்சி முன்னெடுக்கின்றது. 1987 ஆம் ஆண்டிலிருந்து  இவ்வாறான நிதி நிர்வாகத்தில் இவ்வாறான வீழ்ச்சி  ஏற்பட வில்லை. ஏந்தவொரு அரசாங்கத்திற்கும் கிடைக்காத பாரிய நன்மை மசகு எண்ணை கொள்வணவின் ஊடாக அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32
news-image

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவசர...

2025-12-11 19:06:32
news-image

அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்...

2025-12-11 18:43:59
news-image

பேரிடருக்குப் பிறகு மீள்கட்டமைப்புத் தேவைகளுக்கு உலக...

2025-12-11 17:46:45
news-image

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையை...

2025-12-11 17:38:32
news-image

அனர்த்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற...

2025-12-11 16:12:33
news-image

அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் -...

2025-12-11 17:59:28