இலங்கை அணியிடம் எந்த  அணியையும் வெல்வதற்கான திறமையுள்ளது அதற்கான வீரர்கள் உள்ளனர் என அணித்தலைவர் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

சமீபகாலத்தில் நாங்கள் ஒரு நாள் தொடர் எதனையும் வெல்லாத போதிலும் தென்னாபிரிக்காவுடனான ஓரு நாள் தொடரின் இறுதியில் நாங்கள் விளையாடிய விதம் எங்களிற்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய கிண்ணத்தை நாங்கள் வெல்வோம் என்பதற்கான உத்தரவாதம் இல்லை ஆனால் நாங்கள் எங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி விளையாடினால் துடுப்பாட்டம் பந்து வீச்சு களத்தடுப்பு ஆகியவற்றில் சிறப்பான செய்தால் எங்களால் வெல்ல முடியும்  அதற்கான வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை சாதாரணமாக எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மிகவும் கடினமான தொடர்  என தெரிவித்துள்ள மத்தியுஸ் சிறிய தவறை கூட செய்யமுடியாது,அவ்வாறு தவறிழைத்தால் நீங்கள் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டியிருக்கும்  தவறுகளை குறைத்து வெற்றிபெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் மலிங்கவிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றேன், அவர்  முக்கிய தொடர்களில் சிறப்பாக விளையாடுவார்,அவரிடம் திறமை உள்ளதன் காரணமாகவே அவரை அணியில் சேர்த்தோம் அவர் குறித்து எனக்கு முழு நம்பிக்கையுள்ளது என மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.