காணாமல்போனோரின் உறவுகள் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

09 Mar, 2016 | 05:02 PM
image

கடந்த 2008 ஆம் ஆண்டு கடற்படையினரால் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளையும் கணவர்களையும் மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கணவர்களையும் பிள்ளைகளையும் இழந்தவர்கள் இன்று பகல் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்கள் பிள்ளைகளை கண்ணில் காட்டாமல் எங்கு ஒழித்துவைத்திருக்கிறார்கள். இந்த நல்லாட்சி அரசாங்கமாவது எங்களுக்கு நல்லவழியை காட்டும் என்று எண்ணி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

தெஹிவளை, மன்னார் மற்றும் திருகோணமலை  ஆகிய பிரதேசங்களில் வெளிநாடுகளுக்கு படிப்பிற்காகவும்  வேலை நிமிர்த்தமும் செல்ல இருந்தவர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை பணயக்கைதிகளாக வைத்து பணம் பறித்துமுள்ளனர்.

ஆட்கொணர்வு மனு அளித்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் எமது பிள்ளைகளை எம்மால் காணவில்லை. நாம் இறந்தபின் எங்கள் பிள்ளைகளை வெளியில் விட்டு ஏதும் பயனில்லை.

கடந்த அரசாங்கத்தில் எமக்கு நியாயம் கிடைக்கவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கமாவது எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்று எண்ணுகிறோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில்...

2026-08-12 17:32:12
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு...

2026-08-12 17:28:31
news-image

2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள்...

2026-08-12 17:12:16
news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29