மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று இடங்களில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலொன்றின் அடிப்படையில் மாநகர சபை பிரதேசமான குவைத் சிட்டி மற்றும் காத்தான்குடியிலுள்ள அலியார் சந்தி, பெண்கள் சந்தை ஆகிய இடங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த நபர்களையும் ஹெரோயின் போதைப்பொருட்களையும் போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டகளப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரகைளை மேற்கொண்டுள்ளனர்.