சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற ஹேக்கருக்கு ரூ.22 இலட்சம் பரிசு வழங்க பேஸ்புக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் பிற கணினிகளில் அனுமதியில்லாமல் நுழையும் ஒரு ஹேக்கர். 

இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.

பேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.

பேஸ்புக்கின் இந்த குறையை ஆனந்த் பிரகாஷ் பேஸ்புக் நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, தற்போது பேஸ்புக் இருந்த குறையை சரி செய்துள்ளது.