(லியோ நிரோஷ தர்ஷன்)

மீனவர்களின் பிரச்சனைக்கு இந்தியாவை நம்பி பலன் இல்லை. சர்வதேச நீதிமன்றில் முறையிட்டு தீர்வைப்பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையை அனைத்து வகையிலும் சூறையாடுகின்றன. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் உண்மைகளை மூடி மறைத்து போலியான விடயங்களை கூறி வருகின்றது. 

இந்தியாவை எதிர்கொள்ள முடியா விடின் ஒப்பந்தங்கள் தொடர்பில் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்படுகின்றனர். எமது கடற்பரப்பில் அவர்களின் படகுகள் மீன் பிடிக்கும் போது அனைத்த கடல் வளங்களும் அழிக்கப்பட்டு விடுகின்றன. 

இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தியாவுடன் வெறுமனே பேச்சு வார்த்தை நடத்தி பலன் இல்லை அவர்கள் ஒரு போதும் நீதியை பெற்றுக் கொடுக்க மாட்டார்கள். 

 ஆகவே உடனடியாக இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார்.