(இரோஷா வேலு) 

காலி - ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் பாதையில் சென்றுக்கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவிக்கின்றது. 

சம்பவத்தில் காயமடைந்த தலாதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவர் காராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாம் மர வீதி தலாதுடுவ கொங்கல பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபரொருவர் வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

இந்நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவருக்குமிடையில் காணப்பட்ட தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே மேற்படி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கும் அபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.