(இராஜதுரை ஹஷான்)

கண்டி இராசதானியை கைப்பற்ற இங்கு மன்னராட்சி  இடம்பெறவில்லையென  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதாக குறிப்பிட்டு களியாட்டத்தை அரங்கேற்றியவர்கள்  மீண்டும் கண்டி  நகரில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக குறிப்பிடுவது அவர்களின் மனநிலையினை  வெளிப்படுத்துகின்றது.  

அரசாங்கம்  இப் போராட்டத்திற்கு  எவ்வித தடையும்  விதிக்காது கண்டி இராசதானியை கைப்பற்றும் வரை போராட முடியும். 05 ஆம் திகதி இடம் பெற்றதன்  இரண்டாம் பாகத்தை கண்டியில் காணலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியினர் கண்டியில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்த நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.