தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பொஸ் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை ஓவியா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று இரவு வந்தடைந்த ஓவியாவுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள கணேசா நகைக் கடையினை திறந்து வைப்பதற்காகவே இலங்கைக்கு வந்துள்ளார் ஓவியா.

அந்த வகையில், இன்று காலை செட்டியார் தெருவிலுள்ள குறித்த நகைக்கடைக்கு வந்த ஓவியாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக ஓவியாவை வரவேற்றுள்ளனர்.

இதன்போது “இலங்கையில் இப்படி ஒரு வரவேற்பு எனக்கு கிடைக்குமென நான் நினைத்துப் பார்க்கவில்லை. இதனை பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.

இது இலங்கைக்கான எனது இரண்டாவது விஜயம். 

எனது ரசிகர்களின் ஆதரவினால் தான் நான் இந்த நிலையில் உள்ளேன். எனது ரசிகர்களின் இந்த ஆதரவு என்றும் நிலைத்திருக்கும் என நம்புகின்றேன் என திறப்பு விழாவின் போது ஓவியா தெரிவித்திருந்தார்.