
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்பட 8 பேருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிதிமோசடி தொடர்பான சட்டத்தின் கீழ், கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ரூபா 12.5 கோடியைப் பயன்படுத்தி எயார் லங்கா நிறுவனத்துக்கு சேவை வழங்கும் கவர்ஸ் கோபரேஷன் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தை வாங்கியமை தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நாமல் ராஜபக்ஷ தவிர ஏனைய 7 பேர் நாட்டிலிருந்து வெளியேற தடைசெய்யப்பட்டுள்ளதுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிறுவனங்களின் நான்கு வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.