செரீனாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

Published By: Vishnu

10 Sep, 2018 | 12:47 PM
image

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காகவும் அவரது ஏனைய நடவடிக்கைக்காகவும் செரினா வில்லியம்ஸ்க்கு 17 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவோமி ஒசாகா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.  

இந்தப் போட்டியின் போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா வில்லியம்ஸ் மிகவும் கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார். 

இந்தப் போட்டியில் அவர் மூன்று விதிமுறை மீறலில் ஈடுபட்டார்.

முதலில் அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். ஏடிபி போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை.

இரண்டாவதாக டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தது. செரீனாவின் இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்து செரினாவின் புள்ளியை குறைத்தார்.

மேலும் மூன்றாவது தடவையாக நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார், என்னுடையை புள்ளியை பறித்த அவர் ஒரு திருடர் என கோபத்தில் நடுவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். 

இந்நிலையில், செரினாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள அமெரிக்க டென்னிஸ் சங்கம், 

நடுவர்களை நோக்கி செரீனா கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததற்காக 10 ஆயிரம் டொலர்களையும், பயிற்சியாளருக்கு சைகை காண்பித்ததற்காக 4 ஆயிரம் டொலர்களையும் ஏனைய குற்றங்களுக்காக 3 ஆயிரம் டொலர்கள் என மொத்தமாக 17 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமா விதித்துள்ளது.

இந்த தொகையானது இலங்கை நாணய மதிப்பில் 27 இலட்சம் ரூபா பெறுமதியாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58