வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திருகோணமலை கப்பல்துறையில் 119 வது வீடமைப்பு தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து பயனாளிகளுக்கான ஆவணங்களும் ஏனைய வீட்டுக் கடன் மானியங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று 9 ஆம் திகதி காலை இடம்பெற்றது.

காணிகள் இல்லாத இளம் தம்பதியினர் 25 பேருக்கு வழங்கப்பட்ட இந்த விசேட வீட்டுத் திட்ட தொகுதி கையளிப்பு வைபேவத்தில்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப் , க.துரைரெட்ணசிங்கம் , இம்ரான் மகரூப், எம்.எஸ்.தௌபிக் ஆகியோரும் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்தியக் கலாநிதி எஸ். ஞானகுணாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்