போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு குவைத் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இலங்கைப் பெண் ஒருவர் மற்றும் மூன்று இந்தியர்களுக்கு, எதிராக நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குவைட் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது குற்றவாளிகள் வசம் இருந்து 4 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

எனினும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் பற்றி ஆராய்ந்து வருவதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், தெரிவித்துள்ளார்.