ஆசிய கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆசிய கிண்ணப்போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது திறமையை மீண்டும் நிருபிப்பார் என அணியின் முகாமையாளர் சரித் சேனநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

லசித் மலிங்கவின் திறன் நிரந்தரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்தில் அவரால் தன்னை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலை காணப்பட்ட போதிலும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களில் அவர் விசேடமானவர் எனவும் சரித் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மலிங்க சமீபகாலங்களில் கூட ரி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார், அவர் இலங்கையின் தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களில் சிறப்பானவராக விளங்காவிட்டாலும் பவர் பிளே ஓவர்கள் மற்றும் இறுதி  ஓவர்களில் மிகவும் திறமையாக பந்து வீசக்கூடியவராக காணப்படுகின்றார் எனவும் சரித்சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மலிங்க தெரிவு செய்யப்பட்டமை அணிக்கும் லசித் மலிங்கவிற்கும் சிறந்த விடயமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள முகாமையாளர் அவர் சிறப்பாக விளையாடுவார்,இலங்கை அணியின் ஒரு நாள் திட்டங்களிற்கு அவர் வலு சேர்ப்பார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

தினேஸ்சந்திமல் ஆசிய கிண்ணத்தில் விளையாடுவதற்கான உடல் தகுதியை பெறுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சரித் சேனநாயக்க அதேவேளை அகிலதனஞ்செய  விளையாடாதது அணிக்கு சிறிய பின்னடைவு என குறிப்பிட்டுள்ளார்.