தமிழக ஆளுநர் கருணை காட்டவேண்டும் என ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தாயார் பத்மாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழு தமிழகர்களின் விடுதலை தொடர்பில்  தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ள நிலையிலேயே நளினியின் தாயார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள நளினியின் தாயார் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கருணை காட்டவேண்டும், எனது மகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் ஆளுநர்  அவர்கள் 27 வருடங்களை சிறையில் கழித்துள்ளதை கருத்தில்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.